உள்ளாட்சி தேர்தல் கட்சிகளின் வெற்றி சதவிகிதம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தலில் 1.96% இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை எனவும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

Update: 2021-10-15 23:30 GMT

பைல் படம்

உள்ளாட்சி தேர்தல் கட்சிகளின் வெற்றி பெற்ற   இடங்களின் சதவீத விவரம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் கட்சிகளின் வெற்றி சதவீத விகிதத்தை தேர்தல் ஆணையம்  நேற்று அறிவித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த 6 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெற்றது.

இந்த நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் திமுக 89.54% இடங்களை கைப்பற்றியுள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  மாவட்ட கவுன்சிலர் இடங்களில் காங்கிரஸ் 5.23%, அதிமுக 1.31%, சுயேட்சைகள் உட்பட மற்ற கட்சிகள் 1.96% இடங்களையும் கைப்பற்றியுள்ளன.   இதுபோன்று ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களில் திமுக 68.26%, அதிமுக 14.85 %, காங்கிரஸ் 2.32%, பாஜக 0.56%, சிபிஎம் 0.28%, சிபிஐ 0.21%, தேமுதிக 0.07% இடங்களையும், மற்ற கட்சிகள் 12.46% இடங்களையும் கைப்பற்றி உள்ளதாகவும், உள்ளாட்சி தேர்தலில் 1.96% இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை எனவும் மாநில  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News