ஞாயிற்றுக்கிழமை டாஸ்மாக் கடைகள் செயல்படாது - டாஸ்மாக் நிர்வாகம்
ஞாயிற்றுக்கிழமை டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அரசு மதுக்கடைகள் வழக்கமாக பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு பத்து மணி வரை திறந்திருக்கின்றன. இந்த நிலையில் தற்போது நாளை முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, டாஸ்மாக் கடைகள் வழக்கம் போல பகல் 12 மணிக்கு திறக்கப்படும். இரவில் ஒரு மணி நேரம் முன்னதாக அதாவது 9 மணிக்கே அரசு மதுக்கடைகள் மூடப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், அன்றைய தினம் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்றும் அறிவித்து உள்ளது.