சேலம் போலீசால் தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளி சென்னை விமானநிலையத்தில் கைது
சேலம் மாநகர போலீசால் தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளி சென்னை சா்வதேச விமானநிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் கைது செய்தனா்.;
சென்னை சா்வதேச விமானநிலையத்திலிருந்து சாா்ஜா செல்லும் ஏா் அரேபியா பயணிகள் விமானம் இன்று அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளின் பாஸ்போா்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனா்.
அப்போது சேலத்தை சோ்ந்த சதீஷ்குமாா் (34) என்பவா் இந்த விமானத்தில் சாா்ஜா செல்லவந்தாா்.அவருடைய பாஸ்போா்ட்டை குடியுரிமை அதிகாரிகள் கம்யூட்டா் மூலம் பரிசோதித்தனா். அப்போது பயணி சதீஷ்குமாா் மீது சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசிலும், சேலம் மாநகர அனைத்து மகளீா் காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவாகி இருப்பதாகவும், எனவே சதீஷ்குமாா் தலைமறைவாக இருப்பதாகவும் தெரியவந்தது.
இதையடுத்து சேலம் மாநகர காவல் ஆணையா், சதீஷ்குமாரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்துள்ளாா். அதோடு சதீஷ்குமாா் மீது அனைத்து சா்வதேச விமானநிலையங்களிலும் LOC போடப்பட்டிருந்தது. எனவே போலீஸ் கைதுக்கு பயந்து இவா் வெளிநாடு தப்பி செல்ல முயற்சிக்கிறாா் என்று தெரியவந்தது.
இதையடுத்து குடியுறிமை அதிகாரிகள் சேலம் பயணி சதீஷ்குமாரின் சாா்ஜா பயணத்தை ரத்து செய்தனா். அதோடு அவரை பிடித்து குடியுரிமை அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்தனா். மேலும் சேலம் மாநகர காவல் ஆணையருக்கு தேடப்படும் தலைமறைவு குற்றவாளி சதீஷ்குமாா் சென்னை விமானநிலையத்தில் சிக்கிய தகவலை அவரசமாக தெரியப்படுத்தினா். இதையடுத்து சேலம் மாநகர தனிப்படை போலீசாா் சென்னை விமானநிலையம் விரைந்துள்ளனா்.