தமிழக அரசு தினமும் ரூ.87 கோடி வட்டி கட்டுகிறது
தமிழக அரசு நாள் ஒன்றுக்கு ரூ.87.31 கோடி வட்டியாக மட்டும் செலுத்தி வருகிறது என்று நிதி அமைச்சர் தெரிவித்தார்.
120 பக்கம் கொண்ட வெள்ளை அறிக்கையை வெளியிட்டு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது,தமிழக அரசு நாள் ஒன்றுக்கு ரூ.87.31 கோடி வட்டியாக மட்டும் செலுத்தி வருகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் முதலீட்டுக்காக வாங்கும் கடனுக்கு 8.08 சதவீதம் வட்டி வழங்குகிறது.
கடன் வாங்கி செய்யப்படும் முதலீடுகள் மூலம் அரசு நிறுவனங்களுக்கு கிடைப்பது 0.45 சதவீத வருமானம் தான் என்று கூறினார்.