சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக செயல்பட்ட பெண்: பச்சிளம் குழந்தையுடன் நள்ளிரவில் நீதிபதி முன்பு ஆஜர்

சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக செயல்பட்ட பெண் பச்சிளம் குழந்தையுடன் நள்ளிரவில் நீதிபதி முன்பு ஆஜர் செய்யப்பட்டார்.;

Update: 2021-06-19 02:29 GMT

சிவசங்கர் பாபாவுக்கு உதவியதாக கூறப்படும் பெண் 

சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக செயல்பட்ட பெண்ணை பச்சிளம் குழந்தையுடன் நள்ளிரவில் நீதிபதி முன்பு சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர். 

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் என்னும் பள்ளியை சிவசங்கர் பாபா நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன் அவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் சிவசங்கர் பாபாவை கைது செய்த சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணைக்குப் பின் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு கிளை சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் சிவசங்கர் பாபா அவரிடம் மேற்கொண்ட விசாரணைக்கு பின் அவருடைய ஆசிரமத்திற்கு தொடர்ச்சியாக வந்த சுஸ்மிதா என்ற பெண்ணை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி முன்பு நள்ளிரவில் ஆஜர்படுத்தினர். பின்னர் அப்பெண்ணை வருகின்ற இரண்டாம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

சிவசங்கர் பாபா கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்து இரண்டு நாள் கூட ஆகாத நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட பெண்ணையும் அவளது பச்சிளம் குழந்தையின் சிபிசிஐடி போலீசார் கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News