தேர்தலை ரத்து செய்ய வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்
பணப்புழக்கம் அதிகம் புழங்கியதாக கூறப்படும் 5 தொகுதிகளில் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார்.;
ஐந்து தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார்.
தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கொளத்தூர், சேப்பாக்கம், திருச்சி மேற்கு, காட்பாடி, திருவண்ணாமலை ஆகிய தொகுதிகளில் அதிக பணப்பட்டுவாடா நடைபெறுவதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் புகார் மனு அளித்து உள்ளார்.
மேலும் கூகுள் பே மூலம் நவீன முறையில் திமுகவினர் பணம் பரிமாற்றம் செய்ததாகவும், வாக்காளர்களுக்கு திமுகவினர் பணப்பட்டுவாடா செய்துள்ளனர். ஜனநாயகத்தை விட பண நாயகத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளது திமுக என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டி உள்ளார்.