கொளத்தூர் எவர்வீன் தனியார் பள்ளியில் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா
கொளத்தூர் எவர்வீன் தனியார் பள்ளியில் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.;
லயன்ஸ் கிளப் பன்னாட்டு அரிமா சங்க கூட்டமைப்பு மற்றும் சென்னை ஜி.கே.டி. மில்லேனியம் அரிமா சங்கம் சார்பாக நல்லாசிரியர் விருது வழங்கும் விழா இன்று நடந்தது.
விழாவிற்கு லயன்ஸ் கிளப் சரவணன் தலைமை வகித்தார். தலைவர் எஸ்.வி.மாணிக்கம் , மாவட்ட ஆளுநர் மற்றும் சிறப்பு விருந்தினர் சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி நக்கீரன் மேலும் கொளத்தூர் எவர்வின் தனியார் பள்ளி குழும் கல்வி நிறுவனர் தலைவர் முதல்வர் புருஷோத்தமன் ஆகியோர் கலந்து கொண்டு நல்லாசிரியர் விருது வழங்கினர்.இந்த விழாவில் எவர்வின் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் லயன்ஸ் கிளப் குழுனர் கலந்து கொண்டனர்.