பெண்கள் அனைத்து உரிமைகளோடு வாழ பாலின சமத்துவமிக்க சமுதாயம் படைப்போம்! -முதல்வர் ஸ்டாலின் ட்வீட்
பெண்கள் அனைத்து உரிமைகளோடு வாழ பாலின சமத்துவமிக்க சமுதாயம் படைப்போம் என மருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரின் 136வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ட்வீட் செய்துள்ளார்.
பிற்போக்குத்தனங்களும் பெண் அடிமைத்தனம் முடைநாற்றம் வீசிக் கொண்டிருந்த காலத்தில் புரட்சிக்கனலாய் வாழ்ந்த இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரான மருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரின் 136-வது பிறந்தநாள் , பெண்கள் அனைத்து உரிமைகளோடும் வாழ பாலினச் சமத்துவமிக்க சமுதாயம் படைப்போம்! என்று ட்விட்டரில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்