கலாம் பிறந்த நாளான இன்று வறுமையை ஒழிக்க உறுதியேற்போம்: முதல்வர் ஸ்டாலின்

மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் 90-வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது

Update: 2021-10-15 12:00 GMT

பைல் படம்

கலாம் பிறந்த நாளான இன்று வறுமையை ஒழிக்க உறுதியேற்போம்   என்று முதல்வர் ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.

மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் 90-வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இவர் பிறந்த நாளான இன்று வறுமையை ஒழிக்க உறுதியேற்போம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் 90-வது பிறந்த தினம் இன்று (அக். 15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ராமேஸ்வரம் பேய்க்கரும்பில் அமைந்துள்ள கலாமின் தேசிய நினைவகம் முழுவதும் வண்ண விளக்குகளாலும், கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடம் வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று தன் ட்விட்டர் பக்கத்தில், ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து தனது படிப்பாலும் விடாமுயற்சியாலும் இந்தியாவின் ஏவுகணை நாயகன் எனப் பெயர் பெற்று, பின்னாளில் இந்தியக் குடியரசின் முதல் குடிமகனாகவும் உயர்ந்த அப்துல் கலாமின் பிறந்த நாளில் இந்தியாவின் எதிரி என அவர் கருதிய வறுமையை ஒழிக்க உறுதியேற்போம் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

Tags:    

Similar News