இரட்டைமலை சீனிவாசன் சிலைக்கு மரியாதை செலுத்திய அமமுக
இரட்டைமலை சீனிவாசன் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இரட்டைமலை சீனிவாசன் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர் அமமுக துணைப் பொதுச்செயலாளர் செந்தமிழன் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது.
அதிமுகவில் நவக்கிரக தலைவர்கள் உள்ளனர் .இவர்கள் அனைவருமே தங்களுக்குள் கருத்து வேறுபாடு உடையவர்கள். எடப்பாடி பழனிசாமி பாஜகவுக்கு ஆதரவாக பேசுகிறார். சி வி சண்முகம் பாஜக கூட்டணி வைத்ததால்தான் தேர்தலில் தோற்றோம் என்கிறார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து நிர்வாகிகள் கூண்டோடு விலகுவது குறித்து கேட்டபோது கட்சியில் சேர்வது கட்சியிலிருந்து கட்சிக்கு தாவுவது இதெல்லாம் அரசியலில் இயல்பான ஒன்றுதான்.
அதிமுகவிற்கும், சசிகலாவிற்கு சம்பந்தமில்லையென எடப்பாடி பழனிச்சாமி பேச அருகதை கிடையாது. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற முதல் சட்டமன்ற கூட்டத் தொடரில் அமைச்சர்கள், எம்எல்ஏகள் அனைவரும் சசிகலா பெயரை உச்சரித்து தான் பேசினர்.
இது இன்றும் அவை குறிப்பில் உள்ளது. சசிகலாவிற்கு அதிமுகவுடன் தொடர்பில்லையென பேசுவது நகைச்சுவையாக உள்ளது.