கோயில் யானைகளுக்கு மாதம் 2 முறை மருத்துவ பரிசோதனை அமைச்சர் சேகர்பாபு தகவல்

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கு மாதம் இரண்டு முறை மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்

Update: 2021-07-19 17:53 GMT

பைல் படம்

சென்னையில் நிருபர்களை சந்தித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில்,

தமிழகத்தில் கோவில்கள் பராமரிப்பு, கோவில் சொத்துகள் பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருந்து தொடர்ந்து கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டு வருகிறது.

 தமிழகம் முழுவதும் கோவில்களுக்கு எவ்வளவு நிலங்கள் உள்ளது? அதில் தற்போது கோவில் கட்டுப்பாட்டில் இருப்பது எவ்வளவு? ஆக்கிரமிப்பில் இருப்பது எவ்வளவு? என்பது பற்றி கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

அனைத்து விபரங்களும் சேகரிக்கப்பட்டதும் அனைத்து ஆக்கிரமிப்பு நிலங்களும் மீட்கப்படும். குத்தகை, வாடகை பாக்கிகள் வசூலிக்கப்படும்.

கோவில்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். அவ்வாறு கும்பாபிஷேகம் நடத்தப்படாத கோவில்கள் பற்றிய விபரமும் சேகரிக்கப்படும்.

அறநிலையத்துறையில் கோவில்களுக்கு சொந்தமான 30 யானைகள் உள்ளது. இந்த யானைகளுக்கு மாதம் 2 முறை மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News