சென்னை நகைக்கடையில் வருமானவரித்துறை அதிரடி: ரூ.1.50 கோடி பறிமுதல்

சென்னை சவ்கார்பேட்டை பகுதியில் உள்ள ஒரு பிரபல நகை கடையில் வருமான வரித்துறை திடீர் ரெய்டு நடத்தினர்.

Update: 2021-03-26 12:22 GMT

சென்னை நகைக்கடை ஒன்றில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை சௌகார்பேட்டை யானைக்கவுனி என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள தனியார் நகை கடையில், நேற்று  நள்ளிரவு  முதல் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். சோதனையின் முடிவில் கணக்கில் வராத ரூ.1 கோடியே 46 லட்சம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News