சென்னை ராயப்பேட்டையில் மனைவியை கொலை செய்த கணவன் கைது

சென்னை ராயப்பேட்டையில், குடும்ப தகராறில், மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-18 07:45 GMT

சென்னை ராயப்பேட்டை, கோயா அருணகிரி முதல் தெருவைச் சேர்ந்தவர் கனிமொழி (22). இவருக்கும், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணி (40) என்பவருக்கும், 2015ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தம்பதியினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில்,  நேற்றும் வழக்கம்போல் தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சுப்பிரமணி, மனைவியின் தலையில் குழவி கல்லைப் போட்டு, கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பினார் . சத்தம் கேட்டு வந்த கனிமொழியின் சகோதரர் கந்தவேல், ரத்த வெள்ளத்தில் கிடந்த சகோதரியை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

அங்கும்  கனிமொழியை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக ஐஸ்ஹவுஸ் போலீசார்,  சுப்பிரமணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News