இல்லம் தேடி கல்வி திட்டம் : முதல்வருடன் கல்வி அமைச்சர் ஆலோசனை

மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை தீர்க்க இல்லம் தேடி கல்வித் திட்டம் புதிதாக கொண்டுவரப்பட உள்ளதாக கூறப்படுகிறது

Update: 2021-10-18 09:30 GMT

பைல் படம்

மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை தீர்க்க புதிதாக கொண்டுவரப்பட்ட இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அன்பில் மகேஷ் தமிழக முதல்வருடன் ஆலோசனை செய்து வருகிறார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி மாணவர்கள் முறையாக கல்வி கற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்த போது மாணவர்களின் நலன் கருதி 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறந்தது. மாணவர்களுக்கு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது.

மாணவர்களுக்கு கற்றல் குறைபாடுகள் இருப்பது தெரிய வந்திருப்பதாக கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, மாணவர்களிடம் இருக்கும் கற்றல் குறைபாடுகளை போக்க 200 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இல்லம் தேடி கல்வி என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளனர். இது தொடர்பாக, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உஷா, ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News