வாக்குச்சீட்டு முறை சாத்தியமா? சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
தேர்தலில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த உத்தரவிட முடியாது என்று சென்னை ஹை கோர்ட் திட்டவட்டமாக கூறியுள்ளது.
வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும், எனவே மீண்டும் வாக்குச்சீட்டுகளை பயன்படுத்தி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் உள்பட பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்த வழக்கு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துவிட்டது.
வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டாலும், இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இனிவரும் தேர்தல்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் தான் தேர்தல் நடக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.