சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று இடியுடன் கனமழை

சென்னை, சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்தது. இன்றும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-11 05:46 GMT

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்தது. இன்றும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அவ்வப்போது உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் கடந்த 2 வாரமாக ஆங்காங்கே மழை பெய்கிறது. அதன் தொடர்ச்சியாக வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் வடமாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, நேற்று பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை ஒரு மணி நேரத்துக்கு மழை பெய்யும் என்று ஆய்வு மையம் கூறியது.

இடியுடன் கனமழை;

இதுதவிர சென்னை கோட்டூர்புரம், அடையாறு மற்றும் புறநகர் பகுதிகளான ஆதம்பாக்கம், பாலவாக்கம், திருவான்மியூர், நீலாங்கரை, பெருங்குடி, சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி உள்பட சில பகுதிகளில் காற்று, இடியுடன் கூடிய கனமழை கொட்டியது. பல இடங்களில் வாகனங்கள் முகப்பு விளக்கு எரியவிட்டபடி சென்றதை பார்க்க முடிந்தது. மழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று குளிர்ச்சியான சூழல் நிலவியது. ஓரிரு இடங்களில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. சில இடங்களில் மழையால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் அதனை உடனடியாக சரிசெய்தனர்.

Tags:    

Similar News