தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும், வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் எங்கெல்லாம், எப்போது எல்லாம் மழை பெய்யும் என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
03.08.2021: நீலகிரி, கோயமுத்தூர் மாவட்டங்களின் மலை பகுதிகள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக
04.08.2021 முதல் 06.08.2021 வரை:, நீலகிரி, கோயமுத்தூர் மாவட்டங்களின் மலை பகுதிகள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
அரபிக்கடல் பகுதிகள்:
02.08.2021 முதல் 06.08.2021வரை: தென் மேற்கு, வடக்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். ,இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.