தமிழகத்திற்கு ஒரு கோடி தடுப்பூசிகள் வழங்க வேண்டும் -பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
தமிழகத்திற்கு ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.;
சென்னை : தமிழகத்திற்கு ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
தமிழகத்தை பொறுத்தவரையில் மாநிலம் முழுவதும் தேவையான தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்வது மிகவும் கடினமாக உள்ளது. தடுப்பூசி ஒதுக்கீட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்க வேண்டும் என்றும், மக்கள் தொகை அடிப்படையில் தடுப்பூசிகள் கிடைத்திட வலியுறுத்தியும், ஒரு கோடி தடுப்பூசியை சிறப்பு ஒதுக்கீடாக வழங்குமாறும் தெரிவித்துள்ளார்.