முதல்வர் மு.க ஸ்டாலினுடன் சென்னை அமெரிக்க நாட்டு தூதர் சந்திப்பு

சென்னையில் உள்ள அமெரிக்க நாட்டு தூதரகத்தின் தூதர் ஜூடித்ராவின் முதல்வர் மு.க ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

Update: 2021-06-25 02:08 GMT

சென்னை தலைமை செயலகத்தில் அமெரிக்கதூதர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

சென்னை : தலைமைச் செயலகத்தில் சென்னையில் உள்ள அமெரிக்க நாட்டு தூதரகத்தின் தூதர் ஜூடித்ராவின்  மரியாதை நிமித்தமாக முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின் போது தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு பொதுத்துறை செயலர் ஜெகன் நாதன், சென்னையிலுள்ள அமெரிக்க நாட்டு தூதரகத்தின் அரசியல் அலுவலர் டஸ்டின் பிச்சல், அரசியல் மற்றும் பொருளாதார அலுவலர் பரத்குமார், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News