மத்திய அரசை ஏன் ஒன்றிய அரசு என அழைக்கிறோம் ? சட்டபேரவையில் முதல்வர் மு.க ஸ்டாலின் விளக்கம்
மத்திய அரசை ஏன் ஓன்றிய அரசு என அழைக்கிறோம் என்று சட்டபேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன், தமிழக அரசு ஒன்றியம் என்று பயன்படுத்துவது குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த முதல்வர் மு.க ஸ்டாலின், புதிதாக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே தமிழக அரசு மத்திய அரசுக்கு எழுதக்கூடிய கடிதங்களில் மத்திய என்ற வார்தையை பயன்படுத்தாமல் ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்தி வந்தது.
அதில், ஒன்றிய அரசு என்று குறிப்பிடுவதை சிலர் சமூக குற்றம் என்று கூறுகின்றனர். ஆனால் அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள ஒன்றியம் என்ற சொல்லையே தாங்கள் பயன்படுத்துகின்றோம்.
ஒன்றியம் என்பது ஒரு தவறான சொல் அல்ல என்று குறிப்பிட்டார். அதேபோல் இதற்கு முன்பாக கலைஞர், அண்ணா பயன்படுத்தாத வார்த்தையை தற்போது தமிழக அரசு பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
1957ம் ஆண்டு திமுக-வின் தேர்தல் அறிக்கையில் ஒன்றியம் என்ற வார்த்தையை தாங்கள் பயன்படுத்தி இருக்கிறோம் என்ற விளக்கத்தையும் முதலமைச்சர் கொடுத்திருக்கிறார்.
ஒன்றியம் என்ற வார்த்தையில் கூட்டாட்சி தத்துவம் அடங்கியிருப்பதால் மத்திய அரசை குறிப்பிட ஒன்றியம் என்ற சொல்லைத்தான் இனி பயன்படுத்துவோம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.