தமிழகத்தில் மாநகராட்சி கமிஷனர்கள், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர்கள் பணியிட மாற்றம், தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் ஆவடி, திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர்கள் உட்பட நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர்களை அதிரடியாக மாற்றம் செய்து தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.;

Update: 2021-07-13 12:33 GMT

பைல் படம்

சென்னை : தமிழகத்தில் ஆவடி, திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர்கள் உட்பட நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர்களை அதிரடியாக மாற்றம் செய்து தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில்,

* காத்திருப்போர் பட்டியலில் இருந்த ரவிச்சந்திரன் திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராகவும்,

* காத்திருப்போர் பட்டியலில் இருந்த கண்ணன் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்ட இணை இயக்குனராகவும்,

* காத்திருப்போர் பட்டியலில் இருந்த சிவக்குமார் ஆவடி மாநகராட்சி கமிஷனராகவும்,

* செங்கல்பட்டு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் முஜிபூர் ரகுமான் திருச்சி மாநகராட்சி கமிஷனராகவும்,

* திருநெல்வேலி நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராக இருந்த சுல்தானா, சேலம் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராகவும்,

* நகராட்சி நிர்வாக இயக்குனரகத்தின் இணை இயக்குனராக இருந்த சரவணன் செங்கல்பட்டு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராகவும்,

* தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்ட இணை இயக்குனராக இருந்த விஜயலட்சுமி திருநெல்வேலி நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராகவும்,

* வேலூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராக இருந்த விஜயக்குமார் நகராட்சி நிர்வாக இயக்குனரகத்தின் இணை இயக்குனராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

* திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராக இருந்த சரவணகுமார் தஞ்சாவூர் மாநகராட்சி கமிஷனராகவும்,

* சேலம் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராக இருந்த அசோக்குமார் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இணை இயக்குனராகவும்,

* தேசிய நகர்ப்புற வாழ்வாதார இணை இயக்குனராக இருந்த பாரிஜாதம் நகராட்சி நிர்வாக இணை இயக்குனராகவும்,

* திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனராக இருந்த பாலசுப்பிரமணியன் உள்ளாட்சி குறைத்தீர்ப்பு செயலாளராகவும்,

* உள்ளாட்சி குறைத்தீர்ப்பு செயலாளராக இருந்த குபேந்திரன் வேலூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராகவும்,

* திருச்சி மாநகராட்சி கமிஷனராக இருந்த சிவசுப்பிரமணியன் திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனராகவும்,

* தஞ்சாவூர் மாநகராட்சி கமிஷனராக இருந்த ஜானகி தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News