தமிழ்நாடு போக்குவரத்து பணியாளர்கள் ரூ.14.46 கோடி கொரோனா நிவாரண நிதி!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து அனைத்து பணியாளர்கள் சார்பில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.14.46 கோடி வழங்கப்பட்டது.

Update: 2021-06-07 11:14 GMT

போக்குவரத்து கழக ஊழியர்களின் ஒருநாள் ஊதியமான ரூ.14.46 கோடியை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.

தமிழகத்தில் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வந்தது. இதனால் பலருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மேலும் கூடுதல் மருத்துவ உபகரணங்கள் தேவைப்பட்டது. இதனால் தங்களால் முடிந்த பணத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதியில் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

அதன்படி தொழில் அதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சிறுவர்களின் சேமிப்பு பணங்கள் என்று பல தரப்பட்ட மக்கள் கொரோனா நிவாரண நிதிக்கு பணம் வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில், தமிழகத்தில் கொரோனா நிவாரண பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு அரசு அனைத்து போக்குவரத்து பணியாளர்கள் நிதியுதவி வழங்கியுள்ளனர்.

இதன்படி, தங்களது ஒருநாள் சம்பள தொகையான ரூ.14.46 கோடியை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.

Tags:    

Similar News