தமிழக பஞ்சாயத்து அலுவலங்களில் சிசிடிவி கேமரா - அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
தமிழக பஞ்சாயத்து அலுவலகங்களில் சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்து பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பஞ்சாயத்துகளில் 1997 ஆம் ஆண்டு முதல் 6 பட்டியலின தலைவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் சாதிய பாகுபாடுகளை தவிர்க்க பட்டியலினத்தவர் தலைவராக உள்ள கிராம பஞ்சாயத்து அலுவலகங்களில், சிசிடிவி கேமரா பொருத்தக்கோரி வழக்கறிஞர் ராஜகுரு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், தமிழகம் முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்து அலுவலக வளாகங்களில் சாதிய ரீதியிலான குற்றங்களை கட்டுப்படுத்த, சிசிடிவி கேமரா பொருத்த கோருவது பற்றி 4 வாரத்திற்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.