3 கோவில்களில் இணை ஆணையர் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள 3 கோவில்களில் இணை ஆணையர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.;
இது தொடர்பாக தமிழக அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள உத்தரவில், திருப்பூர் மண்டல இணை ஆணையர் நடராஜன் பழனி முருகன் கோயில் இணை ஆணையர் ஆகவும், தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் அன்புமணி திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் இணை ஆணையர் ஆகவும், திருநெல்வேலி மண்டல இணை ஆணையர் செல்வராஜ் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் சுசீந்திரம் கோயில் இணை ஆணையர் பதவியை கூடுதல் பொறுப்பாக கவனிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.