சென்னை துறைமுகம் பகுதியில் பாஜக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
தேர்தல் சமயங்களில் பணப்பட்டுவாடா செய்வது என்பது சகஜமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில், சென்னை துறைமுகம் பகுதியில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததை தடுத்த பாஜக பிரமுகர் சரத் என்பவரை, 3 பேர் கொண்ட மர்மக்கும்பல், அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டது. இதில், அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சரத் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.