எஸ்டிபிஐ கட்சி மத்திய சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் சாலை மறியல் போராட்டம்
மத்திய அரசைக்கண்டித்து சென்னையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினர்.
3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் எஸ்டிபிஐ கட்சியினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி விவசாயிகள் (27.09.21) நடத்திய பாரத் பந்த் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக எஸ்டிபிஐ கட்சி மத்திய சென்னை மாவட்டம் (வடக்கு) சார்பாக ,மத்திய சென்னை மாவட்ட (வடக்கு) பொதுச் செயலாளர் எஸ்வி. ராஜாள் தலைமையில், துறைமுகம் தொகுதி, பாரிமுனை, குறளகம் அருகில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் மத்திய சென்னை மாவட்ட (வடக்கு) நிர்வாகிகள் மற்றும் துறைமுகம், வில்லிவாக்கம் மற்றும் எழும்பூர் தொகுதி,வட்டம்,கிளை நிர்வாகிகள் மற்றும் SDTU மத்திய சென்னை மாவட்டம் மற்றும் கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்துக்கொண்டு மத்தியில் ஆளும் ஒன்றிய அரசை கண்டித்தும், 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.