தாம்பரம் மாநகராட்சி பகுதியில் சாலை ஓரங்களில் வைக்கப்பட்ட விளம்பரபேனர்கள் அகற்றம்

அனுமதியின்றி வைக்கப்பட்ட 75 விளம்பரபலகைகள்அகற்றப்பட்டன. அனைத்து விளம்பரபலகைகளும் அகற்றப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்;

Update: 2021-12-30 18:00 GMT

தாம்பரம் மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள ராட்ச விளம்பரம் பேனர்கள் அகற்றப்பட்டன.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாலையோரங்களில் பேனர்கள்,ராட்ச விளம்பர பதாகைகள் வைப்பதால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுவதால் சாலை ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள ராட்ச விளம்பர பேனர்களை அகற்ற மாநகராட்சி தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் முடிச்சூர் ரோடு,ஜிஎஸ்டி சாலை, பல்லாவரம் ரேடியல் சாலை, கீழ்கட்டளை,வேளச்சேரி ரோடு,மேற்கு தாம்பரம் பேருந்து நிலையம், இரும்புலியூர்,கடப்பேரி பேருந்து நிலையம்,மாடம்பாக்கம்,செம்பாக்கம், அகரம் மெயின் ரோடு போன்ற பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 75 ராட்ச விளம்பர பலகைகளை அகற்றிள்ளனர். மேலும் மாநகராட்சி சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் அனைத்து விளம்பர பலகைகளும் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News