டிரான்ஸ்பர் கேட்டு என்னிடம் வராதீங்க... அமைச்சர் சுப்பிரமணியன் கண்டிப்பு
பணியிட மாறுதல் தொடர்பாக, அமைச்சர் அலுவலகத்தை யாரும் அணுக வேண்டாம்' என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில், அவரது அறை கதவில் ஒட்டிய 'நோட்டீஸ் முதல்வரின் அறிவுறுத்தலுக்கு இணங்க மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களின் பணியிட மாறுதல்கள் அனைத்தும், வெளிப்படையான கலந்தாய்வின் வழியே நடக்கின்றன. எனவே, பணியிட மாறுதல் தொடர்பாக, அமைச்சர் அலுவலகத்தை அணுக வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.