முதல்வரிடம் நேரடியாக புகார் புதிய இணையதளம்
முதல்வரிடம் நேரடியாக புகார் அளிக்க வேண்டுமா? இதோ உங்களுக்காக முதல்வரின் புதிய இணையதளம்;
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களிடம் நேரடியாக பொதுமக்கள் புகார் அளிக்க வசதியாக முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் www.cmcell.tn.gov.in/register.php என்ற இணையதளத்தில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளிக்கும் புகார் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றியும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.