தச்சர், கொல்லர் தொழில் செய்வோருக்கு குறைந்தபட்ச ஊதியத்தொகை : அரசாணை வெளியீடு
தமிழகத்தில் தச்சர், கொல்லர் தொழில் செய்வோருக்கு குறைந்தபட்ச ஊதியத்தொகை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.;
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (பைல் படம்)
சென்னை : தமிழகத்தில் தச்சர், கொல்லர் தொழில் செய்வோருக்கு குறைந்தபட்ச ஊதியத்தொகை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதன்படி, குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் நிர்ணயம் செய்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அரசாணையை வெளியிட்டுள்ளது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணி புரிவோருக்கு தனித்தனியே குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஊதியம் கட்டாயம் தரவேண்டும் என்றும் ஆண், பெண் என ஊதியத்தை பிரிக்க முடியாது எனவும் தொழிலாளர்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.