கொரோனா சிகிச்சைக்கு உபகரணங்கள் வாங்க இன்போசிஸ் சார்பில் ரூ.6 கோடி வழங்கல்
இன்போசிஸ் நிறுவனம் சார்பில், ரூ.6 கோடி மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள், முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் நேரில் வழங்கப்பட்டது.;
தமிழகத்தில் தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை மேற்கொண்ட தீவிர முயற்சியால், கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகின்றன. அதே நேரம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மற்றும் தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் சார்பில் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் முதலமைச்சரின் நிவாரண நிதி உதவிகளை அளிக்கும்படி, நிறுவனங்கள், வணிக அமைப்புகள் உள்ளிட்ட பலவற்றிற்கும் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது.
அவ்வகையில், இன்போசிஸ் நிறுவனம் சார்பாக, அதன் மையத் தலைவர்கள் சூரிய நாராயணன் மற்றும் அனில் குமார் ஆகியோர் , சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக ரூ. 6 கோடி மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள ஏதுவாக, காசோலையை வழங்கினர்.