மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயணத்திற்கான அரசாணை வெளியீடு

தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகள், அவர்களுடன் பயணிக்கும் உதவியாளர் ஒருவர் நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்வதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

Update: 2021-06-10 03:00 GMT

 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகள், அவர்களுடன் பயணிக்கும் உதவியாளர் ஒருவர் நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்வதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

முன்னதாக மகளிர் மற்றும் திருநங்கைகள் போல தங்களுக்கும் கட்டணமில்லா பயண திட்டத்தை அறிவிக்க வேண்டும் என மாற்றுத் திறனாளிகள் நலச் சங்கம் முதல்வருக்கு வேண்டுகோள் வைத்ததை தொடர்ந்து, கடந்த ஜூன் 3ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத் திறனாளிகள் அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரப்பூர்வ அரசாணையை இன்று வெளியிட்டுள்ளது. அதில் 40 சதவீதம் மற்றும் அதற்கு மேலும் மாற்றுத்திறன் உடையவர்கள் தங்கள் அடையாள அட்டையை காண்பித்து கட்டணம் இல்லாமல் பேருந்தில் பயணிக்கலாம் எனவும் அவர்களுடன் ஒரு உதவியாளரும் பயணிக்கலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Tags:    

Similar News