மின் பொறியாளர்கள் சங்கம் சார்பாக ரூ.12 லட்சம் கொரோனா நிவாரண நிதி
தமிழ்நாடு பொதுப்பணித்துறை மின் பொறியாளர்கள் சங்கம் சார்பாக தலைமைச் செயலகத்தில் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.12 லட்சம் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.;
சென்னை : தமிழ்நாடு பொதுப்பணித்துறை மின் பொறியாளர்கள் சங்கம் சார்பாக தலைமைச் செயலகத்தில் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.12 லட்சம் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா ஐஏஎஸ், பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் (கட்டிடம்) விஸ்வநாத் பொதுப்பணித்துறை மாநிலத் தலைவர், பொறியாளர் அழகர்சாமி மற்றும் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் நிவாரண நிதி வழங்கப்பட்டது.