ஆடம்பர ஏற்பாடுகள் செய்ய வேண்டாம்: மாவட்ட ஆட்சியர்களுக்கு இறையன்பு ஐஏஎஸ் உத்தரவு!

நான் மாவட்டங்களுக்கு வரும்போது ஆடம்பர ஏற்பாடுகளை செய்ய வேண்டாம். அரசுக்கு வீண் செலவு ஏற்படும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.;

Update: 2021-06-10 08:30 GMT

தலைமைச் செயலாளர் இறையன்பு.

தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வரும் தனக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்து அரசு பணத்தினை செலவு செய்ய வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக தலைமைச்செயலர் இறையன்பு ஐஏஎஸ் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், எனது வருகையின் போது எனக்காகப் பெரிய அளவிலான தடபுடல் ஏற்பாடுகள்  செய்யக்கூடாது. காலை உணவு மிக எளிமையாக இருக்க வேண்டும்.

அதேபோல, இரண்டு காய்கறிகளுடன் சைவ சாப்பாடு மட்டும் போதுமானது. இதைத்தவிர, ஆடம்பர ஏற்பாடுகள் எதுவும் இருக்கக் கூடாது. இதற்கான செலவுகள் அரசு கணக்கில் சேர்ந்துவிடும்." என்று அறிவுறுத்தியுள்ளார்.

Tags:    

Similar News