வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் கைது

வெளிநாட்டில் 8 வருடங்களாக தலைமறைவாக இருந்த குற்றாவாளி சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-07-24 07:34 GMT

சென்னை விமான நிலையம் பைல் படம்

கன்னியாகுமரியில் நடந்த கோஷ்டி மோதலில் சம்பந்தப்பட்ட இளைஞா் 8 ஆண்டுகள் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்துவிட்டு,நேற்றிரவு குவைத்திலிருந்து விமானத்தில் திரும்பி வந்தபோது,சென்னை விமானநிலையத்தில் குடியுறிமை அதிகாரிகள் சோதனையில் கண்டுப்பிடித்து கைது செய்தனா்.

குவைத்திலிருந்து தனியாா் சிறப்பு விமானம் ஒன்று நேற்று இரவு சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது.அதில் வந்த பயணிகளின் பாஸ்போா்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமானநிலைய குடியுறிமை அதிகாரிகள் கம்யூட்டா் மூலம் ஆய்வு செய்து அனுப்பினா்.

அப்போது கன்னியாகுமரியை சோ்ந்த தாதீயூஸ்(33) என்பவரும் அந்த விமானத்தில் குவைத்திலிருந்து வந்தாா்.அவருடைய பாஸ்போா்ட்டை பரிசோதித்தபோது,கம்யூட்டரில் தாதீயூஸ் கன்னியாகுமரி போலீசால் கடந்த 8 ஆண்டுகளாக தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று தெரியவந்தது.

மேலும் இவா் மீது 2013 ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த ஒரு கோஷ்டி மோதல்,கொலை மிரட்டல்,அடிதடி சண்டை போன்ற வழக்குகள் இருப்பதாகவும் தெரியவந்தது.

இதையடுத்து பயணி தாதீயூஸ்சை வெளியே விடாமல்,குடியுறிமை அலுவலகத்தில் ஒரு அறையில் அடைத்து வைத்தனா்.

மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில்,அந்த கோஷ்டி மோதல் வழக்கில் போலீசாா் கைது செய்துவிடுவாா்கள் என்ற பயத்தில் வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிட்டாா்.

இதையடுத்து கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு,தாதீயூஸ்சை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து,அனைத்து சா்வதேச விமானநிலையங்களிலும் LOC போட்டு வைத்திருந்தாா்.

தாதீயூஸ் குவைத்தில் கூலி வேலை செய்துவந்தாா்.8 ஆண்டுகளாகிவிட்டதால்,போலீசாா் நமது வழக்குகளை மறந்திருப்பாா்கள் என கருதி,சொந்த ஊருக்கு செல்ல குவைத்திலிருந்து விமானத்தில் சென்னை திரும்பினாா்.ஆனால் சென்னை விமானநிலையத்தில் குடியுறிமை அதிகாரிகள் சோதனையில் சிக்கிக்கொண்டாா்.

இதையடுத்து சென்னை விமானநிலைய குடியுறிமை அதிகாரிகள் கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு, 8 ஆண்டுகள் தலைமறைவு குற்றவாளி சிக்கிய தகவலை தெரிவித்தனா்.கன்னியாகுமரியிலிருந்து தனிப்படை போலீசாா் சென்னை விமானநிலையத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனா்.

Tags:    

Similar News