திருவாரூர் தொகுதி மக்கள் சார்பில் கொரோனா நிவாரண நிதி, எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன் முதல்வர் மு.க ஸ்டாலினிடம் வழங்கல்
திருவாரூர் தொகுதி மக்கள் சார்பில் வழங்கப்பட்ட நிதியை, கொரோனா நிவாரணத்துக்கு எம்எல்ஏ பூண்டிகலைவாணன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.;
கொரோனா நிவாரண பணிகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விவசாயிகள், வர்த்தகர்கள், ஓட்டுனர்கள், நல சங்கங்கள், பொது நல சங்கங்கள், தன்னார்வலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் நிதி அளித்தனர்.
தொகுதி மக்கள் அளித்த 29 லட்சத்து 71 ஆயிரத்து 301க்கான காசோலையை மக்களின் சார்பில் திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கே.கலைவாணன் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை நே வரில் சந்தித்து வழங்கினார்.