ஓய்வு நில அளவை ஊழியர் சங்கத்தின் சார்பில் கொரோனா நிவாரண நிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர்
தமிழ்நாடு ஓய்வு பெற்ற நில அளவை ஊழியர் சங்கத்தின் சார்பில் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 20 லட்சத்து 20 ஆயிரத்து 20 ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர்.;
சென்னை : தமிழ்நாடு ஓய்வு பெற்ற நில அளவை ஊழியர் சங்கத்தின் சார்பில் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 20 லட்சத்து 20 ஆயிரத்து 20 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில், நில அளவை ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் ராமசுப்பு, பொதுச் செயலாளர் நந்தகோபால், பொருளாளர் ராமலிங்கம், துணை செயலாளர் வரதராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.