குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரி நிறுவனத்தில் 67 மாணவர்களுக்கு கொரோனா
சென்னை அருகே, குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரி நிறுவனத்தில் 67 மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.;
சென்னை குரோம்பேட்டையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கிளையாக, எம்,ஐ,டி கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. அங்கு உள்ள விடுதி மாணவர்களுக்கு தொடர்ச்சியாக காய்ச்சல் மற்றும் சளி அறிகுறிகள் இருந்தன. இதையடுத்து, மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, 1417 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக வந்துள்ள முடிவுகளில் 67 மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 67 மாணவர்களின் மாதிரிகளை சேகரித்து ஒமிகிரான் தொற்று பாதிப்பா என கண்டறிய ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் கல்லூரி நிர்வாகம் ஒரு வாரகாலம் விடுமுறை அளித்துள்ளது. மேலும் பல மாணவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தொற்று ஏற்பட்டு 46 மாணவர்களில் 33 பேர் கல்லூரி விடுதியிலேயே தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றன. 13 மாணவர்களை வீட்டு தனிமையில் இருக்க அனுப்பப்பட்டுள்ளன. செங்கல்பட்டு ஆட்சித்தலைவர் ராகுல்நாத், தாம்பரம் காவல் ஆணையாளர் மு.ரவி ஆகியோர் நேரில் ஆய்வு செய்து அங்குள்ள மருத்துவ குழுவினரிடம் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர்.