நீர்வளம் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சங்கத்தின் சார்பில் கொரோனா நிதி

சென்னை : தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் நீர்வள ஆதாரத்துறை மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சங்கத்தின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 40 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் நேரில் வழங்கினார்.
இந்நிகழ்வின் போது பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, பொறியாளர் சங்கத்தின் தலைவர் பிரபாகர், பொதுச் செயலாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.