ஊடக வழக்குகள் வாபஸ், முதல்வர் ஸ்டாலினுக்கு ஊடகச் சுதந்திரத்துக்கான கூட்டணி அமைப்பினர் நன்றி தெரிவிப்பு

ஊடகங்கள் மீது கடந்த ஆட்சியில் தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்ததற்காக முதல்வர் ஸ்டாலினை ஊடகச் சுதந்திரத்துக்கான கூட்டணி அமைப்பினர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

Update: 2021-06-27 16:37 GMT

 ஊடகச் சுதந்திரத்துக்கான கூட்டணி (The Alliance For Media Freedom) அமைப்பின் தலைவர் என். ராம், மூத்த பத்திரிகையாளர் பகவான் சிங், நக்கீரன் இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால், பெண் ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பின் (NWMI) சார்பில் லட்சுமி சுப்பிரமணியன் மற்றும் இந்துஜா ரகுநாதன், அமைப்பாளர் பீர் முகமது ஆகியோர் ஊடகங்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

சென்னை : ஊடகங்கள் மீது கடந்த ஆட்சியில் தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்ததற்காக முதல்வர் ஸ்டாலினை ஊடகச் சுதந்திரத்துக்கான கூட்டணி அமைப்பினர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

முதல்வர் முகாம் அலுவலகத்தில் இன்று ஊடகச் சுதந்திரத்துக்கான கூட்டணி (The Alliance For Media Freedom) அமைப்பின் தலைவர் என். ராம், மூத்த பத்திரிகையாளர் பகவான் சிங், நக்கீரன் இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால், பெண் ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பின் (NWMI) சார்பில் லட்சுமி சுப்பிரமணியன் மற்றும் இந்துஜா ரகுநாதன், அமைப்பாளர் பீர் முகமது ஆகியோர்.

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு அளித்த பதிலுரையில், "கடந்த ஆட்சியில் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக ஊடகங்கள் மீது அரசு தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்" என்று அறிவித்து, ஜனநாயகத்தின் அடிநாதமான பேச்சுச் சுதந்திரத்தைப் பாதுகாத்ததற்கு தங்களது நன்றியினையும் பாராட்டுதல்களையும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News