சென்னை பெருநகர காவல் கொரோனா உதவி மையம் எண்.9498181239 அறிவிப்பு
ஊரடங்கில் தகவல்கள் மற்றும் ஆலோசனை பெற சென்னை பெருநகர காவல் துறை 9489181239 என்ற கொரோனா உதவி மையம் எண்ணை அறிவித்துள்ளது.;
தமிழகத்தில் கரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. மேலும் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 05.00 மணி வரையில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவித்து அமலில் உள்ளது.
பொதுமக்கள் கரோனா ஊரடங்கு குறித்து தகவல்கள் பெறவும்,சந்தேகங்களை கேட்கவும் சென்னை பெருநகர காவல்துறையின்கரோனா கட்டுப்பாட்டறை உதவி மையம் எண் 9498181239அறிவித்துள்ளது.
பொதுமக்கள் கரோனா ஊரடங்கு குறித்த தகவல்கள் மற்றும் ஆலோசனைகள் பெற சென்னை பெருநகர காவல்துறையின் கரோனா கட்டுப்பாட்டு அறையின் 9498181239 என்ற உதவி மைய எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொல்லலாம் என தெறிவிக்கப்படுள்ளது.
மேலும், அவசர உதவி தேவைப்படுவோர் காவல்துறை உதவி எண்.100 மற்றும் 112 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறும், காவலன் SOS செயலியை பயன்படுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.