சென்னையில் நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றவர்களுக்கு பெண்கள் தர்மஅடி !

சென்னை துரைப்பாக்கத்தில் அரசு நிலத்தை அபகரிக்க முயன்றவர்களை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Update: 2021-06-14 08:40 GMT

சென்னை துரைப்பாக்கம், கல்லுக்குட்டையில் நீர்நிலை நிறைந்த பகுதி உள்ளது. இதனை சுற்றி 5,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் இங்குள்ள காலி இடங்களை, அதிமுகவை சேர்ந்த சிலர் வளைத்துப்போட்டு, ரூ. 2லட்சம் முதல் 5 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்து வந்தனர்.

இது தொடர்பாக, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, சோழிங்கநல்லுாரை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் சிலர் மீது நடவடிக்கை எடுத்தார். ஆட்சி மாற்றத்துக்கு பின் தி.மு.கவினர் என்று கூறப்படும் சிலர் அதேபோல் இடங்களை ஆக்கிரமித்து விற்பனை செய்ய முயன்றதாக தெரிகிறது. திருவள்ளுவர் நகரில் உள்ள சில இடங்களை, போலி ஆவணம் தயார் செய்து விற்பனை செய்வதாகவும் தெரியவந்துள்ளது.

இதன்படி, தி.மு.க வை சேர்ந்தவர்கள் என்று கூறப்படும்  சிலர் அந்த இடத்தின் முகப்பில் இருந்த குடிநீர் தொட்டியை அகற்றி, இடத்தை பாதுகாக்க சுற்றி வேலி அமைக்க முயன்றுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த துரைப்பாக்கம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்பகுதி பெண்கள், போலீசார் கண்முன்னே, ஆக்கிரமிக்க வந்த நபர்களை விறகு கட்டை, துடைப்பம் கொண்டு சரமாரியாக தாக்கினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு இடத்தை ஆக்கிரமிக்க முயன்றதாக ரமேஷ்மணிகண்டன், ராஜலிங்கம், சத்யா உள்ளிட்டோர் மீது, துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News