சென்னை - பெங்களூரு விரைவு சாலை திட்டம் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை - பெங்களூரு விரைவு சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு, தேசிய நெடுஞ்சாலை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-07-19 17:10 GMT

சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை.

சென்னை-பெங்களூர் பயண நேரத்தை குறைக்க புதிதாக எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க மத்திய அரசால் திட்டமிடப்பட்டது. இந்த சாலையானது, சென்னை ஸ்ரீபெரும்புதுாரில் தொடங்கி பெங்களூர் நகரின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள ஒசகோட்டை வரையில் அமைக்கப்பட உள்ளது.

சென்னை - பெங்களூரு விரைவு சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படும் நடவடிக்கைகளுக்கு தடை செய்ய வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக மத்திய அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது

Tags:    

Similar News