மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர்கள் நியமனம், முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்திற்கு உறுப்பினர்கள் நியமனம் செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-07-06 08:55 GMT

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (பைல் படம்)

இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. 

தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினரின் நலன்களைப் பேணிக் காத்திடவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், கடந்த 1989 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 13ஆம் நாளன்று அப்போதைய முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டது.

அதற்குப் பிறகு, கடந்த 2010 ஆம் ஆண்டு மீண்டும் முதல்வர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையச் சட்டம், 2010 இன்படி, சட்டபூர்வ அதிகாரம் பெற்ற ஆணையமாக செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், சிறுபான்மையினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திருத்தியமைத்து, அதன் தலைவராக பீட்டர் அல்போன்ஸ் அவர்களை நியமித்து (28.06.2021) அன்று உத்தரவிட்டிருந்தார்.

தற்போது தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்திற்கு மஸ்தான் அவர்களை துணைத் தலைவராகவும், தமீம் அன்சாரி, ஹர்பஜன் சிங் சூரி, மன்ஞ்ஜித் சிங் நய்யர், சுதிர் லோதா, பைரேலால், டான் பாஸ்கோ, இருதயம், பிக்கு மௌரியார் புத்தா உள்ளிட்டோரை உறுப்பினர்களாகவும் நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News