பட்ஜெட் கூட்டத் தொடரில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் முதலமைச்சர் தகவல்

பட்ஜெட் கூட்டத் தொடரில் சிஏஏ, 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.;

Update: 2021-06-22 12:31 GMT

தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்.

சென்னை : நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது சரியாக இருக்காது என முதலமைச்சர்  மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை இரண்டாம் நாள் கூட்டத் தொடர் இன்று நடைபெற்று வருகிறது. இதில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள், ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருவதால் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது தற்போது வேண்டாம்.

மேலும் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் சிஏஏ, மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுவோம் என மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News