மருத்துவ படிப்பில் 7.5% ஒதுக்கீடு: வருகிற அக் 21.,ல் மீண்டும் விசாரணை

7.5% ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்த மனுக்களின் விசாரணையை, அக்., 21க்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

Update: 2021-09-17 08:00 GMT

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்த மனுக்களின் விசாரணையை, அக் 21க்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

அதிமுக ஆட்சியின்போது, மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டது. இதை எதிர்த்து, தனியார் பள்ளி மாணவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் ஒதுக்கீடு கோரி, வழக்கு தொடரப்பட்டது. இம்மனுக்கள், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. 'நீட்' தேர்வு முடிந்து விட்டதால், மாணவர் சேர்க்கை விரைவில் நடக்கும். வழக்கு விசாரணையை துவங்கும்படி, மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம்பஞ்சு கோரினார்.

அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், ''ஓய்வு பெற்ற நீதிபதிகள் கலையரசன், முருகேசன்,ராஜன் ஆகியோரின் அறிக்கைகளை படித்து பார்க்க வேண்டும். அவை, ஏராளமான பக்கங்கள் கொண்டவை. 'குறைந்தது இரண்டு வாரங்கள் ஆகும். விசாரணையை அடுத்த மாதத்துக்கு தள்ளி வைக்க வேண்டும்,' என்றார். இதையடுத்து, வழக்கை விரைந்து விசாரிக்கும்படி, மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம்பஞ்சு கேட்டார். அதற்கு அட்வகேட் ஜெனரல், ''ஏற்கனவே சட்டம் அமலுக்கு வந்து விட்டது. அரசு பள்ளி மாணவர்கள் 300 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்,'' என்றார். அதைத்தொடர்ந்து, இவ்வழக்கின் இறுதி விசாரணையை அக். 21க்கு, முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.

Tags:    

Similar News