மேலும் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தலைமைச் செயலர் உத்தரவு
நேற்று அரசு அதிகாரிகள் மாற்றம் பெற்றதை தொடர்ந்து இன்று மேலும் 39 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.;
தலைமைச்செயலர் இறையன்பு.
சென்னை: தமிழகத்தில் 39 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக தலைமைச் செயலர் வே.இறையன்பு ஐஏஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறிப்பாக, திருவாரூர் ஆட்சியர் சாந்தா நில நிர்வாக கூடுதல் ஆணையர் ஆகவும்,
முன்னாள் செங்கல்பட்டு ஆட்சியர் ஜான் லூயிஸ் உள்துறை மதுவிலக்கு ஆயத் தீர்வை இணைச் செயலாளராக நியமனம்
திருப்பூர் முன்னாள் ஆட்சியர் விஜய கார்த்திகேயன் மாநில மனித உரிமை ஆணைய செயலர் ஆகவும்
நாமக்கல் முன்னாள் ஆட்சியர் மெகராஜ் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணை செயலர் ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.