கோவை வார்ப்பட சங்கத்தின் சார்பாக 1.10 கோடி கொரோனா நிதி
கோவை வார்ப்பட சங்கத்தின் சார்பாக தலைமைச் செயலகத்தில் இன்று கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடியே 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினிடம் நேரில் வழங்கினர்.;
சென்னை : கோவை வார்ப்பட சங்கத்தின் சார்பாக தலைமைச் செயலகத்தில் இன்று கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடியே 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களிடம் நேரில் வழங்கினர்.
இச்சந்திப்பின்போது செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் வார்ப்பட சங்கத்தின் பால்ராஜ், முத்துக்குமார், எழில், கணேஷ் ஜெகதீசன் ஆகியோர் உடன் இருந்தனர்.