தமிழ்நாடு இந்திய காவல் பணி சங்கத்தின் சார்பாக 11 லட்சம் கொரோனா நிதியுதவி
இந்திய காவல் பணி சங்கத்தின் சார்பாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களிடம் கொரோனா நிவாரண நிதிக்கு 11 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
சென்னை : இந்திய காவல் பணி சங்கத்தின் செயலாளர் மகேஷ்குமார் அகர்வால் அவர்கள் தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு 11 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இச்சந்திப்பின் போது காவல்துறை தலைமை இயக்குனர் திரிபாதி அவர்கள் உடனிருந்தார்.