தமிழக அரசின் தலைமைக் கொறடாவாக கோவி.செழியன் நியமனம்
திருவிடைமருதூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் முனைவர் கோவி.செழியன், அரசு தலைமைக் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்;
தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி.செழியன்
திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் கோவி. செழியன் தமிழக அரசின் தலைமைக் கொறடாவாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவைச் செயலர் கி.சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "திருவிடைமருதூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் முனைவர் கோவி.செழியன், அரசு தலைமைக் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவி.செழியன் திருவிடைமருதூர் தனி தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2011, 2016 மற்றும் 2021 என தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களில் இதே தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.